நாட்டு நடப்பில் நமது அதிரடி

Thursday, December 21, 2006

பாகிஸ்தானுக்கு அடி

'பாகிஸ்தானாகி வரும் தஞ்சைத் தமிழ் மண்' எனும் தலைப்பில் ஜடாயுவின் கட்டுரை ஒன்று தமிழ் மணத்தில் வெளிவந்துள்ளது:

"பல ஊர்களில் மாடவீதி, ரதவீதிகளில் எல்லாம் பல முஸ்லீம் வீடுகள் வந்துவிட்டன. எந்த விலை கொடுத்தும் நிலம், வீடு வாங்கத் தயாராக இருக்கிறார்கள்" எனத் துவங்கும் ஜடாயு, மலர் மன்னன் தின்றும் செரிக்காததை ஜட வாயுவாக வெளிப்படுத்தியுள்ளார் .

"தஞ்சையில் இன்று கிராமம் கிராமமாக ஹிந்துக் குடும்பங்களின் எண்ணிக்கை வற்றி, முகமதியக் குடும்பங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதிலும் ஊரூராய் முகமதியர் தமக்கென அமைத்துக் கொள்ளூம் ஜமாத்துகளில் வஹாபிய முகமதியத்தின் ஆதிக்கம் வேரூன்றி வருகிறது"

முஸ்லிம்கள் என்று அழைக்கப்படும் ஒரு சமயத்தாரை இணைய இந்துத்துவாக்கள் பல கூறுகள் போட்டு வகைப்படுத்தி எழுதத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக 'வகாபி' என்றொரு புதுப் பிரிவைத் தாமே உண்டாக்கி, அவர்களை உலகமகாத் தீவிரவாதிகள் போல் சித்திரித்து எழுதி வருகின்றனர். தமக்குத் தேவைப் படும்போது தலித்துக்களையும் இந்துக்கள் எண்ணிக்கையில் சேர்ப்பது; தேவைப்படாத போது அவர்களைத் தனிமைப்படுத்துவது எனும் உத்தியை முஸ்லிம்கள் விஷயத்திலும் இந்துத்துவாக்கள் தந்திரமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

"தொடக்க்கத்திலேயே உரிய கவனம் செலுத்தவில்லையெனில் 'சோழவள நாடு சோறுடைத்து' என்ற பெயரை ஏற்கனவே இழக்கத் தொடங்கிவிட்ட தஞ்சை அதற்குப் பதிலாக 'சோழவளநாடு பள்ளிவாசல்களுடைத்து' என்கிற பெருமையை விரைவில் பெற்றுவிடும் எனலாம்" என்பது ம.ம.வின் அச்சம்.

தஞ்சையும் கும்பகோணமும் பார்ப்பனர்களின் பரம்பரைச் சொத்தா? இணையத்தில் வலைப்பூ கோர்க்கும் நண்பர் ஒருவரின் பதிவொன்றில் அனானியாகப் பின்னூட்டிய ஓர் இந்துத்துவா சொன்னது:-
"இன்றும் கூட உலகமெல்லாம் இஸ்ரேலுடைய அவர்கள் விலை கொடுத்து வாங்கிய நில பாதுகாப்பு போராட்டத்தை தவறாக வரலாறு சொல்லிக் கொடுப்பவர்தானே நீங்கள்?"

இங்கே கும்பகோணத்திலும் தஞ்சையிலும் முஸ்லிம்கள் விலை கொடுத்து வாங்கிய நிலத்தில் வீடு கட்டவோ பள்ளிவாயில் கட்டவோ கூடாது எனக் கூறும் ம.ம.விடமும் ஜடாயுவிடமும் . . அனானியாகப் பின்னூட்டிய இந்துத்துவா இதைக் கூற வேண்டியது தானே?

இஸ்ரேல் விலை ? கொடுத்து வாங்கிய ? ! நிலமான பாலஸ்தீன பூமியில் இஸ்ரேல் படை, குழந்தைகள் உட்பட ஆயிரக் கணக்கில் பாலஸ்தீனர்களைக் குறவர்கள் குருவி சுடுவதுபோல் சுட்டுப் படுகொலை செய்யலாமாம்; அதைச் சுட்டிக் காட்டுவது தவறான வரலாறாம்.

ஆனால் தாம் விலை கொடுத்து வாங்கிய நிலத்தில் வீடு கட்டவோ பள்ளிவாயில் கட்டவோ கூடாது எனக் கூறுவது சரியான வரலாறாம்.

சமணத்தையும் பவுத்தத்தையும்போல் இஸ்லாமை இவர்களால் அழிக்க முடியவில்லை என்பதாலேயே "தஞ்சையில் பள்ளிவாயில்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது" போன்ற வெறிகளை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்தியாவின் முஸ்லிம்களின் வரலாற்றுத் தொடர்புடைய, அவர்களுக்கு உரிமையான பாபரி மசூதியை உடைத்தனர். (இன்னும் மூவாயிரம் மசூதிகளைக் குறி வைத்துள்ளதாகக் கூறி முஸ்லிம்களிடையே பீதியைப் பரப்பி வருகின்றனர்).

சென்னை தி.நகரில் பள்ளிவாயில் கட்ட வாங்கப் பட்ட நிலத்தில் திடீர்ப் பிள்ளையாரை முளைக்கச் செய்து தமிழ் நாட்டையே நகைக்கச் செய்தனர். ஆனால் அன்று தமிழ்நாட்டில் முதலமைச்சராகக் கருணாநிதி இருந்ததால் பள்ளிவாயில் முஸ்லிம்களுக்கே கிடைத்தது. பிள்ளையாரின் மூலத்தைக் கண்டுபிடித்து, பிள்ளையாரைக் கிணற்றிலிருந்து முளைக்கச் செய்த தலைமைக் காவலரையும் கண்டுபிடித்தார் கருணாநிதி.

"அரபு நாடுகளில் வேலைக்கு வரும் இளைஞர்களில் பெரும்பலோர் தஞ்சை மற்றும் அதன் சுற்றுப் புறத்திலிருந்து வருகின்றனர். அந்த பணப்பலத்தால் கிராமத்திலிருந்து தஞ்சை நகருக்கு மாறி வருகின்றனர் என்பது என் கருத்து." என வலைப் பதிவர் கால்கரி சிவா பின்னூட்டத்தில் கூறியுள்ளது சரியான கணிப்பு.

அன்னிய நாடான அமெரிக்காவில் போய்க் குடியேறிய அம்பிகளெல்லாம் 'Green card' வாங்கி, Flats சொந்தமாக்கலாம்; பெருமாள் கோயிலும் சிவன் கோயிலும் கட்டலாம்; அதற்கு மணியாட்ட இங்கிருந்து குருக்களும் பட்டாச்சாரிகளும் செல்லலாம். ஆனால் தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டக் கிராமப் புறத்தவர் தஞ்சை நகருக்கும் கும்பகோணத்துக்கும் வந்து குடியேறக் கூடாதாம்.

தஞ்சையும் கும்பகோணமும் காஷ்மீரோ வடகிழக்கு மாநிலங்களோ அல்ல - பிறர் விலை கொடுத்து நிலம் வாங்க முடியாது என்று சொல்ல. அதைச் சொல்லும் அதிகாரமும் இவர்களுக்கு இல்லை. காஷ்மீரும் வடகிழக்கு மாநிலங்களும் அரசியல் மற்றும் படை பலத்தால் இந்தியாவுடன் இணைக்கப் பட்டவை. அதனால்தான் அம்மாநிலத்தவருக்குச் சில சலுகைகளை அரசே கொடுத்துள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா ஒரே நாடு எனப் பேருந்துகளிலும் பாட நூல்களிலும் பொறித்து வைத்துவிட்டுக் கிராமப் புறத்தவரை நகர்ப் பகுதிக்குள் விடமாட்டோம் என்று சொல்வது ஃபாஸிஸமல்லவா?

சமயங்கள் இச்சமூகத்திற்குத் தேவையா, அவற்றால் விளைவன நன்மையா தீமையா என்ற வாதங்கள் ஒருபுறமிருக்க, ஒரு வேற்றுச் சமயக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதற்காக அவர்களது உரிமையையும் இருப்பையும் கேள்விக்குறியாக்குவது எவ்வகையில் நியாயம்?

"ஒரு 20 வருடம் முன்பு கூட இந்தக் கருப்பு பர்தா போட்ட பெண்களை இவ்வளவு பார்க்க முடியாது. ஒரு வெள்ளைத் துணியை சம்பிரதாயமாக முகத்தில் சுற்றியிருப்பார்கள், அவ்வளவு தான்.. ஆனால் இப்போது தெருவுக்குத் தெரு இப்படிப் பர்தா அணிந்து கஷ்டப் பட்டு வெயிலில் நடந்து போகும் பெண்களைப் பார்க்கலாம்..." என்று ஜடாயுவிடம் ம.ம. கூறினாராம்.

முஸ்லிம் பெண்கள் அவர்களின் சமய நம்பிக்கைப்படி அல்லது சுய விருப்பில் கருப்பு பர்தா அணிகின்றனர். அதைக் குறை கூற இந்த ம.ம.வுக்கு என்ன உரிமை உள்ளது?

கருப்பு பர்தா அணிவதால் தஞ்சை மண் பாகிஸ்தானாகி விட்டதாகப் புலம்பும் மாமா!

பஞ்சக்கச்சம் என்ற பெயரில் ஒரு அரைக்கால் கோவணத்தைக் கட்டிக் கொண்டு, திறந்த மார்பில் ஓர் அழுக்குப் பூணூலையும் (cross belt) போட்டுப் பெண்கள்போல் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு செல்லும் எந்தப் பார்ப்பனரையாவது முஸ்லிகள் குறை சொன்னதுண்டா?

மாமி ஆத்திலேர்ந்து மடிசார் கட்டிண்டு குலுங்கக் குலுங்க நடந்து போறச்சே யாராச்சும் குத்தம் சொல்றாளா மாமா?

அனுபவிக்கும் போகப் பொருளாகப் பெண்ணைக் கருதி, அவளின் 'அங்க லாவண்யங்களை' க் கண்டு ரசிக்க வடிவமைக்கப் பட்ட உடைதானே மடிசார்.
பருத்த பின்புறம், கனத்த முலை, வழவழ இடுப்பு, கடைந்தெடுத்த கெண்டைக்கால் இவற்றைக் கன பரிமானங்களோடு காட்டுவதல்லவா மடிசார்?

'புதுக்குரல்கள்' என்ற எழுபதுகளின் கவிதைத் தொகுப்பு ஒன்றில், கம்பனின் வரிகளைக் கோர்த்திணைத்துக் கவிஞர் சி.மணி, ஒரு புதுக் கவிதை புனைந்திருந்தார். அதில் பேருந்துக் காட்சி ஒன்று......
"சூடகத் தளிர்க்கை மாதரோடு
சிகரெட் பிடி கை மைந்தரும்
ஊடுற நெருக்கி ஏற
சேவலே முன்னென்போரும்
பெட்டையே முன்னென்போரும்
வரிசையே நன்றென்போரும்
தேர்ந்ததைத் தேறினல்லால்
யாவரே தெரியக் கண்டார்
......................
...............
சரிந்த தலைப்பால் தெரிந்த பூவுள
அவை பாலூட்டக்
கிடைத்தனவோ
பால் உணர்ச்சி ஊட்டிடவே
ஆழக் கழுத்தெடுத்து
நீளம் மிகக்
குறைத்து
சேரப் பிடித்த சோளி....
............................................."

என்று போகும் கவிதையைப் படித்தவுடன் மடிசார் மாமியின் முழு உருவே நினைவில் மேலெழும்.

புதுக் கவிதை உலகின் துவக்க காலக் கவிதைகளில் பரவலாகப் பேசப் பட்ட ஒன்று,(கல்யண்ஜி என நினைவு)
"கருப்பு வளையல் அணிந்த
வேலைக்காரி
குனிந்து நிமிர்ந்து பெருக்கிப் போனாள்;
வாசல் சுத்தமாச்சு-
மனசு குப்பையாச்சு"

இது ஆணின் மனப் போக்கைக் காட்டும் கவிதை.

"தள்ளாடும் கிழவன் கண்ணும் தடுமாறும் அங்கே
தவம் செய்யும் முனிவன் கண்ணும் அலைபாயும் அங்கே!"

எனவே,

"ஈர்க்கிடை போகலாகா எதிரெதிர் பணைத்து விம்மும்
வார்க்குலமறுத்த கொம்மை வரிமுலை"யை வக்கணையாய்க் காட்டும் உடைகளைக் கைவிட்டு இன்றைய தமிழ்ப்பெண் தன் முழு உடலையும் மறைக்கும் 'சுடிதார்' எனும் உடைக்குள் வலம் வருகிறாள். அவளின் பணிக்கும் போக்குவரவிற்கும் இருசக்கர வாகனம் ஓட்டுதற்கும் ஓடிப்போய்ப் பேருந்தில் ஏறுதற்கும் இந்தச் சுடிதார் மிகவும் வசதியாய் உள்ளதாகக் கூறுகிறாள் என் தமிழ்க் குலப்பெண். அந்தச் சுடிதார் உடை பாகிஸ்தானின் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவான தேசீய உடை என்பது மாமாவிற்கோ ஜல்லியடிக்கும் ஜடாயுவிற்கோ தெரியாதா? அந்தச் சுடிதார் உடை அணிவதால் தமிழ்நாடே பாகிஸ்தானாகி விட்டது என்று ஒரு பதிவு போடக்கூடாதா?

"Women wearing 'pardha' is their religious belief, just like a Hindu women wearing 'pottu' and piercing nose and ears for mookkuththi and kammal" என்று BadNewsIndia சொல்லியுள்ளது சரியே.

ஒரு எட்டு /பத்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டு சுமங்கலிப் பெண்கள் நெற்றியில்தான் குங்குமம் வைப்பர். இப்போது வடநாட்டுக் கலாச்சாரத் தாக்கத்தால் தமிழகத்துப் பெண்களில் உயர் தட்டில் உள்ள ஒரு பிரிவினர் உச்சி வகிட்டிலும் குங்குமம் தீட்டுகின்றனர். அது அவர்களின் விருப்பமும் சுதந்திரமும் ஆகும். குங்குமம் சற்றே மேலேறி விட்ட காரணத்தால் தமிழ்நாடு வடநாடாகி விட்டது எனத் தமிழ் இயக்கத்தார் எவராவது பதிவிட்டுள்ளனரா?

"எந்த அளவிற்கு தீவிரவாத இஸ்லாம் ஒரு இடத்தில் பரவி வருகிறது என்பதற்கு கருப்பு "பர்தா" ஒரு அளவு கோல் என்று தோன்றுகிறது." இது ஜடாயு பின்னூட்டியது.

காக்கி அரைக்கால் சட்டையிட்டுக் கம்பு, தடியுடன் தெருக்களில் வலம் வரும் இந்துத்துவாவை விடவா முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு உடை தீவிரவாதம்?

துர்க்கா வாஹினி என்ற பெயரில் துப்பாகியால் சுடும் பயிற்சி பெறும் இந்துப் பெண்களை விடவா கறுப்புடை அணியும் முஸ்லிம் பெண்கள் தீவிரவாதிகளாகின்றனர்?

கிருத்துவசமய அருட்சகோதரிகள் அணியும் உடையும் முஸ்லிம் பெண்களின் கறுப்பு உடை போன்றதே! அந்த அருட்சகோதரிகளை எப்போது தீவிரவாதிகளாக்கப் போகிறீர்கள் மாமா?

வடநாட்டு மார்வாடிகள் வடதமிழகத்தில் - குறிப்பாகச் செங்கல்பட்டு, திண்டிவனம் பகுதிகளில் அடர்த்தியாகக் குடியேறி நகராட்சித் தலைவர், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பதவிகள் பெற்று வாழ முடிகிறது; குஜராத்தின் செளராஷ்டிரப் பகுதியில் இருந்து தமிழகத்தில் குடியேறி வாழும் செளராஷ்டிரர்கள் நகராட்சித் தலைவர், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் எனப் பதவிகள் பெற்று வாழ முடிகிறது; அவர்களின் தாய் மொழியில் பேசி, அதை வாழ வைத்து அவர்கள் தமிழ்நாட்டில் சகல உரிமைகளுடன் சுகமாக வாழ முடிகிறது.

ஆனால் தமிழ் வழங்கும் தஞ்சையின் தமிழ் பேசும் முஸ்லிம் கிராமத்தார் தஞ்சை நகருக்குள் வாழக் கூடாது; அது ஆபத்து எனப் பதிவிடுவதும் அதற்குப் பின்னூட்டி ஜல்லியடிப்பதும் இந்துத்துவாவின் தாக்கம் இணைய உலகில் எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளது என்பதற்குச் சான்றுகளாகும்.

மேற்காண்பவை ம.ம.வோ ஜடாயுவோ சுயமாகச் சிந்தித்து எழுதியவை அல்ல. மாறாக, இந்துத்துவாவின் திட்டமிட்ட செயலாகும் இது என்பது, ஜனநாயகன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் வாயிலாகத் தெளிவாகிறது: அமைதிப் பூங்காவான தமிழகத்தை அமளிக் காடாக்கத் திட்டமிடும் இணைய அறிவு ஜீவி(?)களை அடையாளம் கண்டு புறக்கணிப்பது அமைதி விரும்பும் தமிழர்களின் கடமையாகும்.