நாட்டு நடப்பில் நமது அதிரடி

Friday, June 16, 2006

அதிகாரப் போதை அடி

ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்துப் பழ.நெடுமாறன் நடத்தும் போராட்டங்களில் 'அரசியல் காரணங்களால் பா.ம.க. கலந்து கொள்ளாது' என பா.ம.க. நிறுவனர் தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் ஐயா தெரிவித்துள்ளார்.

என்ன அரசியல் காரணங்கள்?

தம்முடன் கூட்டணியில் இருந்து தற்போது அம்மாவுடன் ஐக்கியமாகிவிட்ட வையாபுரி.கோபாலசாமியும் தொல். திருமாவளவனும் கலந்து கொள்ளும் போராட்டத்தில் தமது கட்சியும் பங்கேற்பது தற்போதைய கூட்டணிக்கு ஒவ்வாது என்பது போன்ற அரசியல் காரணங்களால் பா.ம.க. கலந்து கொள்ளாது என்று தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் ராமதாஸ் கருதியிருப்பாரெனில் அது முற்றிலும் தவறு.

ஏனெனில் தமிழகத்துப் பொறுக்கி அரசியல் (ஓட்டுப் பொறுக்குவதைக் கூறுகிறேன்) காரணங்கள் உலகத் தமிழினத்துக்குச் சிக்கல் வரும்போது செல்லுபடியாகாது. ஒரு பொதுவான நோக்கத்திற்காக - இன்னல் படும் ஈழத் தமிழருக்காக - அரசின் கவனத்தை ஈர்க்க நடத்தப் படும் போராட்டத்தில் அற்ப, கூட்டணிப் பிளவுகளைக் காரணம் காட்டிக் கலந்து கொள்ளாது தவிர்ப்பது என்பது சரியான அணுகுமுறை ஆகாது.

மும்பை (முன்னாள் பம்பா)யில் பிழைக்கச் சென்ற தமிழர்களைத் தாக்கித் துரத்தியடிப்பதற்கென்றே சிவசேனை என்ற பயங்கர குண்டர் படையை நடத்தி வந்தார் பால்தாக்கரே என்ற மராட்டிய பார்ப்பன வெறியர். பின்னர் அவர் இந்துமத வெறியராகி முஸ்லிகளைத் துரத்த வேண்டும் என்றார். (பம்பாய்க் கலவரத்தில் ஆண் குறியைப் பார்த்து அடையாளம் கண்டு, ஆயிரக் கணக்கில் முஸ்லிம்களைச் சிவசேனையினர் கொன்றொழித்தது தனிக்கதை) அப்படிப் பட்ட தமிழர் விரோத பால்தாக்கரேயைத் தமிழகத்துக்கு அழைத்து வந்து ஈழத் தமிழருக்கான ஆதரவு மாநாடு நடத்தியவர்தாம் தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ராமதாஸ் ஐயா. தமிழர் என்று சொன்னால் பால்தாக்கரே வரமாட்டார் என்பதால் அவருக்குப் பிடித்த "இந்து" என்ற இனிப்பு மிட்டாயைக் கொடுத்து, "இலங்கையில் துன்பப் படும் இந்துத் தமிழர்களைக் காக்க" என்று அந்த மாநாட்டை நடத்தினார். இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழர் எதிரியான பால்தாக்கரேயையே அழைத்து மாநாடு போட்டவர், கேவலம் கூட்டணிப் பிளவுகளைக் காரணம் காட்டி இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்திருப்பாரா?

ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது "பெற்ற தாயைப் புணர்வதற்குச் சமம் ; அத்தவறை நான் மீண்டும் செய்யவே மாட்டேன்" என்று வீர ஆவேச உறுதிமொழி எடுத்துத் தமிழகத்தின் செய்தி ஊடகங்களில் நிறைந்து நின்ற ராமதாஸ், குறுகிய காலத்தில் மீண்டும் ஒருமுறை அத்தவறைச் செய்தார். அதற்கே வெட்கப் படவோ தயங்கவோ செய்யாதவர், தமிழ்க்குடிதாங்கி ஆன பின் வைகோவும் திருமாவும் கலந்து கொள்ளும் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வெட்கப் பட்டுப் போராட்டத்தைப் புறக்கணிப்பாரா? நிச்சயமாக இக்காரணத்தால் புறக்கணிக்க மாட்டார்.

பின் வேறென்ன அரசியல் காரணங்கள்?

"நானோ என் குடும்பத்தவரோ அரசியலால் எதிகாலத்தில் எந்தப் பதவியும் பெற மாட்டோம்" என்று தமிழகத்து மக்களுக்கு உறுதிமொழி அளித்து, மேலே சொன்னபடி வழக்கம்போல் உறுதிமொழி(யில்தடு)மாறித் தம் மகன் அன்புமணிக்கு மத்திய அரசில் மந்திரிப் பதவி வாங்கிக் கொடுத்தவர்தாம் மருத்துவர் ஐயா.

இப்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தம் மகனின் பதவிக்குப் பங்கம் வந்துவிடக் கூடாதே என்ற பதைப்பு(அரசியல்)காரணங்களால் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் தமிழ்க்குடிதாங்கித் தம்குடிதாங்கியாகிவிட்டார். இனி கா(ஆ)ட்சிகள் மாறும்போது அடுத்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தைத் தமிழ்க்குடிதாங்கியே முன்னின்று நடத்துவார் என்றும் அப்போராட்டத்திற்குத் திரிசூலத்துடன் பிரவீன் தொகாடியாவையோ நரேந்திர மோடியையோ அழைக்கவும் தயங்க மாட்டார் என்றும் எதிர்பார்க்கலாம்.

4 Comments:

Blogger Unknown said...

you can see the answer here at my blog(sorry for writing in English)
http://kilumathur.blogspot.com/2006/06/blog-post_16.html

June 17, 2006 12:36 am

 
Blogger அசுரன் said...

அண்ணாச்சி அதான் நீங்க்ளே இவர்களின் இயங்கியலை புட்டு வைச்சுடீங்களே.
//தமிழகத்துப் பொறுக்கி அரசியல் (ஓட்டுப் பொறுக்குவதைக் கூறுகிறேன்)//

ஓட்டு பொறுக்குவதுதான் அனைவருக்கும் நோக்கம். இதில் பழைய கொள்கை ஒட்டுதல் காரணமாக சில நேரங்களில் இவர்கள் மக்கள் நலனுக்காக களத்தில் இறங்குவது போல் தோன்றும்.

தங்கள் கட்டுரைகள் பலரையும் அம்பலப்படுத்துகின்றன. இன்னும் எல்லாக் கட்டுரைகளையும் முழுமையாக படிக்கவில்லை(ஒரு அலசல் செய்தேன்).

June 17, 2006 12:50 am

 
Anonymous Anonymous said...

//ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது "பெற்ற தாயைப் புணர்வதற்குச் சமம் ; அத்தவறை நான் மீண்டும் செய்யவே மாட்டேன்" என்று வீர ஆவேச உறுதிமொழி எடுத்துத் தமிழகத்தின் செய்தி ஊடகங்களில் நிறைந்து நின்ற ராமதாஸ்//

பெற்ற தாயையே சந்தியில் நிறுத்தி கேவலப்படுத்தும் இவனையெல்லாம்..................

வன்னிய சகோதரர்களே! இவனா உங்கள் மானம் காக்கப்போகிறான். சிந்தியுங்கள் சகோதரர்களே.

June 17, 2006 6:26 am

 
Blogger அடி-அதிரடி said...

மகேந்திரன், போனபெர்ட், இறைநேசன்

தங்களின் வருகைக்கு நன்றி!

போனபெர்ட்: தங்கள் எழுத்துகளின் வீச்சு அற்புதமாயிருக்கிறது. அசுரன் ஐயா நீங்கள்!

June 17, 2006 3:16 pm

 

Post a Comment

<< Home