பாதுகாப்பு அடி
இம்மாதம் 18ஆம் தேதி, தமிழகத்தின் தொழில் நகரமான ஈரோட்டில், விஷ்வ ஹிந்து பரிஷத் 'இந்து சமுதாயப் பாதுகாப்பு மாநாடு' ஒன்றை நடத்தியது பற்றி நாளேடுகள் செய்திகளைத் தந்திருந்தன.

சிவன் மட்டுமே கடவுள்; அவனன்றி ஓரணுவும் அசையாது என்று வணங்கும் 'சைவ' மதமும் விஷ்னு மட்டுமே உயர்ந்த கடவுள்; மற்றது எதுவுமே கடவுள் இல்லை என்று கூறும் 'வைணவ'மும் சக்திதான் பெரிது; சக்தி இல்லையேல் சிவமே இல்லை; அவளே ஆதி என்று சக்தியை வணங்கும் 'சாக்த'மும், குமரனே (குமாரன் அல்லன்) கடவுள் எனப் பேசும் 'கெளமார'மும் கணபதிதான் ஆதி; அவனே மூலம் என்று அவனை வணங்கும் 'காணாபத்ய'மும் சூரியன் தான் கடவுள்; ஒளி இன்றேல் உலகமே இல்லை என்று சூரியனை வணங்கும் 'செளர'மும் 'ஷண்மதங்'களாக -ஆறுமதங்களாக- இத்தேசத்தில் இருந்தன.
அவற்றுக்கிடையே போட்டிகளும் யார் பெரியவர் என்ற வாதங்களும் நிறைய நடந்திருந்தன. கேரளத்தில், காலடியில் பிறந்த ஆதிசங்கரர் இந்த ஷண்மதங்களையும் இணைத்து, 'இந்துமதம்' என்ற ஒன்றாக்கி, அதன் சேவைக்காகவும் வளர்ச்சிக்காகவும் இந்தியாவின் நான்கு மூலைகளில் நான்கு சங்கர மடங்களையும் நிறுவினார். வடக்கே காசி தெற்கே ஷ்ருங்கேரி, கிழக்கே பூரி, மேற்கே த்வாரகா என அவை நிலைகொண்டுள்ளன.
ஆதி சங்கரர் நிறுவிய மடங்களின் சேவையினால் 'இந்து மதம்' என்று பிற்காலத்தில் அறியப் பட்டுப் பின்பற்றப்படும் மதத்தில் ஆறு கடவுள்கள் போக அய்யப்பனும் ஏழாவது கடவுளாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளான். அதனால் இந்து மதத்துக்கோ இந்து சமுதாயத்துக்கோ எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடவில்லை. மேலும் இந்தியாவின் நிரந்தரப் பிரச்சனைப் பெயரான 'பாபர்' பெயரில் கூட (வாவர்சாமி) ஒரு சிறு தெய்வம் சபரிமலையில் குடிகொண்டுள்ளது. இதனாலும் இந்து மதத்துக்கு எந்த ஆபத்தும் நேரிட்டுவிடவில்லை; இந்து சமுதாயத்துக்கும் ஆபத்தில்லை. மாறாக சினிமா ஸூப்பர் ஸ்டார்களின் படையெடுப்பால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுத் திகழ்கின்றது.
குன்றுதோறாடுவது குமரக் கடவுள் மட்டுமல்லன்; திருப்பதி மலை வாழும் வெங்கடேசனும் அய்யப்பனும் மலைக் கடவுள்களாகிவிட்டனர். அவ்வப்போது எழும்,'யார் பெரியவர்' என்ற சிறிய பிரச்சனைக்கு, "அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதார் வாயில் மண்ணு" என்று தற்காலிகத் தீர்வு காணப்படும்.
ஏழு கடவுள்கள் போக ரஜ்னீஷ், சாய் பாபா, சிவசங்கர் பாபா, யாகவா முனிவர், பங்காரு அடிகள், மாதா அம்ருதானந்த மயி எனப் பல கடவுள்கள் தோன்றியும் இந்து மதத்துக்கு ஆபத்து நேரிட்டுவிடவில்லை; இந்து சமுதாயத்துக்கும் ஆபத்தில்லை.
பின் யாரிடமிருந்து இந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வி.இ.ப.வினர் மாநாடு கூட்டுகிறார்கள்?
மதமாற்றத்தைத் தடுத்து மதத்தைப் பாதுகாக்கப் போகிறார்களாம்.
இந்த தேசத்தை எண்ணூறு ஆண்டுகளாக ஆண்ட முகலாயர்கள் இந்துக்களை மதம் மாற்ற உண்மையாக முயன்றிருந்தால் இன்று இந்துக்கள் சிறுபான்மையினராயிருப்போம். இந்த நாட்டை இருநூறு ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயன் ஒழுங்காக 'ஹோம் ஒர்க்' செய்திருந்தால் இந்நாடு மற்றொரு கத்தோலிக்க நாடாயிருக்கும். ஆட்சியும் அதிகாரமும் கொண்டிருந்த அவர்களால் முடியாததை இன்று சில மிஷனரிகள் செய்து வெற்றி பெறுகின்றன என்று கூறுவது இந்து சமுதாயத்தின் பலவீனத்தைத்தான் வெளிப்படுத்தும்.
பாலுக்கும் ரொட்டிக்கும் கோதுமைக்கும் பணத்துக்கும் மதம் மாறுகிறர்கள் என்று கூறுவது இந்துக்களை அவமதிப்பது போலாகும். ஏன் மதம் மாறுகின்றனர் என்று உண்மையான அக்கறையுடன் சிந்தித்தால் மட்டுமே உரிய விடை கிடைக்கும்.
ஒரு விபத்தில் தன் கணவனைப் பறிகொடுத்துவிட்டு வாழ வழி தெரியாது நான்கு குழந்தைகளுடன் திக்கற்று நின்ற 26 வயதுடைய மகேஸ்வரிக்குப் பஞ்சாயத்துத் தொடக்கப் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் வேலை தரப்பட்டது.

காரணம்:- மகேஸ்வரி ஒரு, 'தலித்' என்பதுதான்.
இவ்வாண்டு கோலாகலத்துடன் இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப் பட்டது. வீர மராட்டியர் வாழும் மாநிலத்தில் R.S.Sஇன் தலைமைச் செயலகம் உள்ள மஹாராஷ்டிர மாநிலத்தின் நாஸிக் மாவட்டத்தில், அரசுப் பள்ளி மைதானத்தில், மராட்டிய அரசு உத்தரவுப்படி தேசீயக் கொடி ஏற்றச் சென்ற சுனிதா பாபு ராவ் கோடெராவ் என்ற பெண் பஞ்சாயத்து ஊழியை , பள்ளி முதல்வராலும் மற்றவர்களாலும் தடுத்து நிறுத்தப் பட்டாள். அவள் எவ்வளவோ கெஞ்சியும் அவளைக் கொடியேற்ற அனுமதிக்கவில்லை.
காரணம்:- சுனிதா ஒரு,'தலித்'.
திண்ணியத்தில் மலம் திண்ண வைக்கப் பட்டான்.
காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.
பாப்பாப் பட்டியிலும் கீரிப்பட்டியிலும் நாட்டார் மங்கலத்திலும் அவனுக்கு ஜனநாயகம் வழங்கிய அடிப்படை உரிமை மறுக்கப் படுகிறது.
காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.
செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக அவன் கொடுமையாகக் கொல்லப் படுகிறான்.
காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.
இன்றும் பற்பல ஊர்களில் அவனால் கடைக்குள் உட்கார்ந்து தேநீர் குடிக்க முடியவில்லை. வெளியில் நின்று குடிப்பதற்கும் தனிக் குவளை.
"நீங்களெல்லாம் சுத்தமில்லாதவா; உங்கத் தெருவுக்கெல்லாம் ஸ்வாமி வராது" என்று சங்கரச்சாரி சொல்வார்.
சரி, சாமி இருக்கிற தெருவுக்கு வந்து தேரை இழுப்போம் என்று போனால் அதற்கும் தடை.
காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.
இவர்களெல்லாம் சமுதாயத்தில் மானம், மரியாதையுடன் வாழ, மற்றவர்களைப்போல் மனிதனாக மதிக்கப்பட அடங்காத் தாகம் கொண்டு தேடிப் போகும் ஆறுதான் 'மதமாறு' என்பது.
'ஆறுமதத்தில்' கிடைக்காதது 'மாறும்மதத்தில்' கிடைக்கும் என்று போகிறார்கள்.
'ஆறுமதத்தில்' கிடைக்காதது 'மாறும்மதத்தில்' கிடைக்கும் என்று போகிறார்கள்.
இந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், வி.இ.ப.இந்த இன ஒதுக்கலை முதலில் இந்து சமுதாயத்திலிருந்து நீக்க மாநாடு போடட்டும்.
எனில்,மாநாடு இன்றியே இந்து சமுதாயம் பாதுகாக்கப்படும்.
22 Comments:
//இந்த தேசத்தை எண்ணூறு ஆண்டுகளாக ஆண்ட முகலாயர்கள் இந்துக்களை மதம் மாற்ற உண்மையாக முயன்றிருந்தால் இன்று இந்துக்கள் சிறுபான்மையினராயிருப்போம்.//
உண்மையுரைத்தீர். ஆனாலும் இந்த லாஜிக்கெல்லாம் அவர்கள் கண்களுக்குத் தெரியாது. அவர்கள் விரும்புவதெல்லாம் இந்த தலித்துகள் தலித்துகளாகவே இருக்க வேண்டும். அவர்கள் தலித் என்பதிலிருந்து விடுதலையாக வழிவகுக்கும் இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும் என்பதே. அதற்காக தலித்தையும் (தலித்தாக இருந்து மதம் மாறிய) முஸ்லிமையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.
March 24, 2006 7:09 am
//இந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், வி.இ.ப.இந்த இன ஒதுக்கலை முதலில் இந்து சமுதாயத்திலிருந்து நீக்க மாநாடு போடட்டும்.
எனில்,மாநாடு இன்றியே இந்து சமுதாயம் பாதுகாக்கப்படும்.//
சரியாகச் சொன்னீர்கள்!
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்து சமூகத்தை..?
March 24, 2006 10:09 am
'கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன்.....' என்ற பழமொழியை நினைவு படுத்தி விட்டுள்ளீர்கள்.
இவர்களுக்குத் தேவை RAM. (Racial Supremacy, Administration, Money).
அதற்குத்தான் இத்தனை ஆட்டமும்.
March 25, 2006 5:00 am
பார்ப்பினியம் என்ற மக்கள் ஒடுக்குமுறை தத்துவமும் அதன் ஆன்மாவான சனாதான் சாதி தத்துவமும் என்றைக்கும் நீங்கள் கூறிய மாற்றத்தை இந்து மதம் என்று அறியப்படும் மதத்தில் கொண்டுவர விடாது. அப்படி ஒரு மாற்றம் வந்தால் அது கலாச்சார தளத்தில் இந்து தத்துவத்தின் அழிவிலிருந்தும், பொருளாதார தளத்தில் எமது மக்களுக்கு கிடைக்கும் முழு உரிமையிலிருந்தும் தான் கிடைக்கும்.
அதாவது,
"உழுபவனுக்கு நிலம் சொந்தம்,
உழைப்பவனுக்கு அதிகாரம்"
June 17, 2006 12:40 am
வாழ்த்துக்கள் கூற மறந்துவிட்டேன், மன்னிக்கவும்!
June 17, 2006 12:41 am
//இந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், வி.இ.ப.இந்த இன ஒதுக்கலை முதலில் இந்து சமுதாயத்திலிருந்து நீக்க மாநாடு போடட்டும்//
சரியான சாட்டையடி! பாராட்டுக்கள்!
June 17, 2006 3:48 am
This comment has been removed by a blog administrator.
June 18, 2006 2:37 am
//இந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், வி.இ.ப.இந்த இன ஒதுக்கலை முதலில் இந்து சமுதாயத்திலிருந்து நீக்க மாநாடு போடட்டும்//
மறைமுகமாக வந்தேறிகளை வாலைச்சுருட்டிக் கொண்டு இருக்கச் சொல்கிறீர்கள் அல்லது வந்த வழிப் போகச் சொல்கிறீர்கள். இது நடக்கிற காரியமா?
மதம் மாறுவதைக் குறித்து இவ்வளவு கூச்சலிடுபவர்கள் அவ்வாறு மதம் மாறும் தலித்களை பிராமணர்களாக மதம் மாற்ற வேண்டியது தானே.
வெறும் பிச்சை காசுக்காக மதம் மாறுகிறார்கள் எனக் கூறுவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்குச் சமமானதாகும். இதனால் தன்மானமுள்ள தலித் மதம் மாறுவது இன்னும் வேகமடையவே செய்யும்.
தீர்வாக சொல்ல வேண்டுமெனில் தலித்கள் மதம் மாறுவது இந்தியாவில் தடுக்கவோ, குறைக்கவோ முடியாத ஒன்றாகும்.
அவர்களுக்குத் தேவை பிச்சைகாசு அல்ல. தன்மானம், சுயகவுரவம், சமூக அங்கீகாரம், சமூகத்தில் மதிப்பு இவையே. இவை எங்கு கிடைக்கின்றனவோ அங்கு அவர்களின் மாற்றத்தினை அணை போட்டு நிறுத்தவே முடியாது.
இந்த அங்கீகாரங்கள் தங்களுக்கு வேண்டும் என்பதை இவ்வளவு உலகம் வளர்ச்சி அடைந்த பின்னரும் இன்னும் அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்று நாம் நம்பினால் அது போல் சுத்த பைத்தியக்காரத்தனம் வேறு எதுவுமே இருக்காது.
அவர்கள் விரும்பும் சுயகவுரவம் இஸ்லாத்தில் மட்டுமல்ல, பிராமணியத்திலும் உள்ளது. அங்கு அவர்களுக்கு மாற அனுமதி மறுக்கப்படுவதாலேயே பெரும்பாலானவர்கள் இஸ்லாத்திற்கு மாறுகிறார்கள் என நினைக்கிறேன்.
எனவே உண்மையிலேயே இந்து சமூகத்தின் பெரும்பான்மையை கட்டிக்காப்பதில் விஹெச்பிக்கு அக்கறை இருக்கிறது எனில், தலித்களை பிராமணர்களாக மதம் மாற அனுமதிக்க போராடட்டும். அவ்வாறு இந்தியாவில் இந்து என்றால் அனைவரும் பிராமணர்கள் என்ற நிலையை உருவாக்கட்டும். இந்து பெரும்பான்மை நிலைநிற்கும். அவர்கள் நினைப்பது போல் இந்தியா அவர்கள் கைகளில் வர மிக எளிய வழி அதுவே.
அதுவரை தலித்கள் இறைநேசர்களாக மாறுவதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது.
அன்புடன்
இறை நேசன்
June 20, 2006 12:39 am
சகோதரரே,
என் பின்னூட்டம் கிடைக்கவில்லையா? ஏன் இன்னும் அனுமதிக்கவில்லை. என் பின்னூட்டத்தில் ஏதாவது தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
அன்புடன்
இறை நேசன்
June 22, 2006 2:28 am
போனபெர்ட், நாமக்கல் சிபி, இறைநேசன், தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
அதிரடியாக விமர்சன அடி அடியுங்கள்.
June 22, 2006 2:45 pm
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
October 21, 2006 4:00 am
//இந்த தேசத்தை எண்ணூறு ஆண்டுகளாக ஆண்ட முகலாயர்கள் இந்துக்களை மதம் மாற்ற உண்மையாக முயன்றிருந்தால் இன்று இந்துக்கள் சிறுபான்மையினராயிருப்போம். இந்த நாட்டை இருநூறு ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயன் ஒழுங்காக 'ஹோம் ஒர்க்' செய்திருந்தால் இந்நாடு மற்றொரு கத்தோலிக்க நாடாயிருக்கும். ஆட்சியும் அதிகாரமும் கொண்டிருந்த அவர்களால் முடியாததை இன்று சில மிஷனரிகள் செய்து வெற்றி பெறுகின்றன என்று கூறுவது இந்து சமுதாயத்தின் பலவீனத்தைத்தான் வெளிப்படுத்தும்.//
சத்தியமான வார்த்தைகள். நன்றி அய்யா!
December 23, 2006 8:19 am
செங்கோடன்!
உங்கள் ஆதங்கம் புரிகிறது. விரைவில் மக்கள் விழித்துக் கொள்வார்கள்.
மதம் என்னும் மாயை தகர்ந்து போகும்போது, சாதி இழிவு எல்லாம் போகும்.
அதற்கு அடையாளம் இருள்நீக்கி சுப்பிரமணியனின் இன்றைய நிலை.
குடியரசுத் தலைவர் காலடியில் இருக்க, தான் உயர்ந்த இருக்கையில் அமர்ந்து பல்லைக் காட்டியது, பல்லிளித்து விட்டதல்லவா?
December 23, 2006 8:44 am
//இந்த தேசத்தை எண்ணூறு ஆண்டுகளாக ஆண்ட முகலாயர்கள் இந்துக்களை மதம் மாற்ற உண்மையாக முயன்றிருந்தால் இன்று இந்துக்கள் சிறுபான்மையினராயிருப்போம். இந்த நாட்டை இருநூறு ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயன் ஒழுங்காக 'ஹோம் ஒர்க்' செய்திருந்தால் இந்நாடு மற்றொரு கத்தோலிக்க நாடாயிருக்கும். ஆட்சியும் அதிகாரமும் கொண்டிருந்த அவர்களால் முடியாததை இன்று சில மிஷனரிகள் செய்து வெற்றி பெறுகின்றன என்று கூறுவது இந்து சமுதாயத்தின் பலவீனத்தைத்தான் வெளிப்படுத்தும்.
சத்தியமான வார்த்தைகள். நன்றி அய்யா!
//
மரைக்காயர் அய்யா!
தங்களது வருகை மகிழ்ச்சியைத் தருகிறது.
யாரும் யாரையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்ய முடியாது என்பதை சுட்டிக் காட்டவே அந்த வரிகளைப் பயன் படுத்தினேன்.இந்துக்களிடம் உள்ள தீண்டாமையும் சாதி பார்த்து இழிவு செய்யும் பண்பும்தான் நிறைய மக்களை இந்து சமயத்திலிருந்து விரட்டி இசுலாம் மற்றும் கிருத்துவச் சமயங்களுக்கு அனுப்பி வைத்தன.இந்த நூற்றாண்டிலும் அவர்கள் திருந்தவில்லை என்பதையே என் பதிவில் நினைவூட்டியிருந்தேன்.
December 23, 2006 8:51 am
//இந்த நாட்டை இருநூறு ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயன் ஒழுங்காக 'ஹோம் ஒர்க்' செய்திருந்தால் இந்நாடு மற்றொரு கத்தோலிக்க நாடாயிருக்கும். //
இஸ்லாமிய அடிவருடி அய்யா,
உங்க 'ஹோம் ஒர்க்' சரியில்லையே. ஆங்கிலேயர்கள் protestants . அயர்லாந்து தான் mainly catholic.
அறிவில்லாம, தீவிரவாதத்துக்கு அடிவருடினா இப்படித்தான் உளற ஆரம்பிப்பாங்க.
பேரையும் அடி-அதிரடின்னு அலட்டலா வச்சுப்பாங்க.
பாலா
December 23, 2006 9:34 am
தல கலக்குற தல
December 24, 2006 9:15 am
வருக bala!
என்பதிவில் நான் தீவிர வாதத்துக்கு அடிவருடி ஒரு சொல் கூட எழுதவில்லை. இந்து சமயத்தின் தீண்டாமையும் இன இழிவு செய்யும் பண்பும் மாறினால் இந்து சமுதாயம் பாதுகாப்புப் பெறும் என்றுதானே எழுதியுள்ளேன், பதிவை மீண்டும் ஒரு முறை அச்சமின்றிக் கருத்தூன்றிப் படியுங்கள் பாலா! அடி அதிரடி என்ற பெயரைப் பார்த்து மிரண்டுபோய்த் தீவிரவாத அடிவருடி என்று உளறியுள்ளீர்கள்:
"இந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், வி.இ.ப.இந்த இன ஒதுக்கலை முதலில் இந்து சமுதாயத்திலிருந்து நீக்க மாநாடு போடட்டும்.
எனில்,மாநாடு இன்றியே இந்து சமுதாயம் பாதுகாக்கப்படும்" என்றுதானே நான் எழுதியுள்ளேன்
இப்படி எழுதினால் இஸ்லாமிய அடிவருடியா?
ஆங்கிலேய நாடு புராட்டஸ்டண்டாக அல்லது கத்தோலிக்க நாடாக இருக்கலாம். கிருத்துவ நாடா இல்லையா? பெரிய தவறைக் கண்டு பிடித்ததுபோல ஆர்ப்பாட்டமுடன் வருவதை விடுத்து நான் என் பதிவில் இந்து சமுதாயத்தின் நிலை பற்றிச் சொல்லியிருப்பதைச் சிந்தியுங்கள்.
என் முழுப் பதிவிலும் உங்களுக்கு மறுப்பெழுத ஒன்றுமே கிடைக்கவில்லை;
"இந்த தேசத்தை எண்ணூறு ஆண்டுகளாக ஆண்ட முகலாயர்கள் இந்துக்களை மதம் மாற்ற உண்மையாக முயன்றிருந்தால் இன்று இந்துக்கள் சிறுபான்மையினராயிருப்போம்" என்று நான் எழுதியிருந்தன் உண்மை சுட்டதால், இதைப் பிடித்து தொங்குகிறீர்கள்.
எனினும் சுட்டிக் காட்டியதற்கு நன்றி!
கிருத்துவம் என்றாலே கத்தோலிக்கம்தான் இந்தியர்களின் நினைவுக்கு வரும். மாதா கோவில்தான் நினைவுக்கு வரும்.
"இந்த நாட்டை இருநூறு ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயன் ஒழுங்காக 'ஹோம் ஒர்க்' செய்திருந்தால் இந்நாடு மற்றொரு கிருத்துவ நாடாயிருக்கும். ஆட்சியும் அதிகாரமும் கொண்டிருந்த அவர்களால் முடியாததை இன்று சில மிஷனரிகள் செய்து வெற்றி பெறுகின்றன என்று கூறுவது இந்து சமுதாயத்தின் பலவீனத்தைத்தான் வெளிப்படுத்தும்" என்று திருத்தி படித்துக் கொள்க!
உங்கள் பின்னூட்டத்திற்கு மேலே மரைக்காயருக்கு நான் சொல்லியுள்ள கருத்தைப் படித்தால் நான் சொல்ல வந்தது என்ன என்று புரியும்.
தலித் எனும் பிரிவினரைத் தாழ்த்தித் தீண்டத்தகாதவர்களாக்காதீர்கள் என்று சொன்னால் உங்களைப்போன்ற உயர் சாதியினர் இப்படித்தான் அலறி அடித்து ஓடிவருவீர்கள்
-
2% மட்டுமே இருக்கும் பார்ப்பன மதத்தை சேர்ந்தவர்கள் தங்களை இந்து மதத்தை சேர்ந்தவர்களாக அடையாளப் படுத்திக் கொண்டு பெரும்பான்மையான உண்மை இந்து மக்களை தாழ்த்தப் பட்டவர்கள் என்று தள்ளிவைத்து, தாங்கள்தான் உண்மையான இந்து மதக் காவலர்கள் போல வேஷம் கட்டிக் கொண்டு திரிகிறார்களே அவர்களைக் கேள்வி கேட்டால் உங்களுக்குப் பொத்துக் கொண்டு வரும்.
December 24, 2006 9:21 am
பரமபிதா! மிதக்கும் வெளி!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அதிரடியில் உங்கள் விமர்சன அடியை வரவேற்கிறேன். பாலா அடித்த விமர்சன அடியைப்போல்..
December 24, 2006 9:30 am
This comment has been removed by a blog administrator.
December 24, 2006 9:57 am
ஒருவனது இழிந்த குணத்தைக் கண்டித்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, அவனுக்கு மற்றொருவன் கடிதம் எழுதியிருந்தான். கடிதம் பெற்றவன் , தன்னைக் குறித்துச் சொல்லப்பட்ட உண்மைகளைப் படித்துத் திகைத்துப் போனான். ஆனாலும் அதை ஒப்புக்கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ளும் பக்குவம் இன்றி உன் கடிதத்தில் எழுத்துப் பிழை உள்ளது; அதைத் திருத்தி மீண்டும் என்னைப் பிழையில்லா மொழியில் திட்டு என்று சொன்னதுபோல உள்ளது பாலாவின் பின்னூட்டம்.
அடிஅதிரடி சொல்லியுள்ளதுபோல முழுப் பதிவிலும் பார்ப்பன அடிவருடிக்குச் சொல்ல ஏதுமில்லாததால் பூணூலின் கனம் கூட இல்லாத விஷயத்தைப் பிடித்துத் தொங்குகிறது.
December 24, 2006 10:05 am
ஆகா,,, இந்த அடியும் சூப்பர்.
//இந்த தேசத்தை எண்ணூறு ஆண்டுகளாக ஆண்ட முகலாயர்கள் இந்துக்களை மதம் மாற்ற உண்மையாக முயன்றிருந்தால் இன்று இந்துக்கள் சிறுபான்மையினராயிருப்போம்.//
உண்மை கசக்கும். சிலருக்கு வாந்தியும் வரும்.
// பெற்றோர்கள் மாணவர்களை உண்ண அனுமதிக்கவில்லை.
காரணம்:- மகேஸ்வரி ஒரு, 'தலித்' என்பதுதான் //
// அவள் எவ்வளவோ கெஞ்சியும் அவளைக் கொடியேற்ற அனுமதிக்கவில்லை.
காரணம்:- சுனிதா ஒரு,'தலித்'. //
எது நடந்தால் என்ன, எவன் நாசமாப் போனால் என்ன, அய்யோ முசுலீம் மதம் மாத்தரானேன்னு ஒப்பாரி வைப்போம்.
நன்றி
வசந்த்
December 24, 2006 3:52 pm
வாங்க வசந்த்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
மேலே மரைக்காயருக்கும் balaவுக்கும் நான் சொல்லியுள்ள மறுமொழியைப் படித்தீர்களல்லவா?
December 25, 2006 9:21 am
Post a Comment
<< Home