நாட்டு நடப்பில் நமது அதிரடி

Friday, June 30, 2006

ஆறால் அடித்த அடி...

ஆறு அடி போடும் படி அசுரன் போர்ப் பறை கொட்டி அழைத்ததால் நான் போட்ட ஆறு அடி :-

எனக்குப் பிடித்த உலகத் தலைவர்களுள் அறுவர்
1. அன்னை இந்திரா காந்தி (அரசியல் தொலை நோக்குடன் பங்களா தேசத்தை உருவாக்கியதில்)
2. ஆபிரஹாம் லிங்கன் (அமெரிக்க அடிமை ஒழிப்பில்)
3. மிகாயீல் கார்ப்பசேவ் (நிறைய சுதந்திர நாடுகள் தோன்றியதற்கு)
4. ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவின் உறக்கத்தைக் கெடுப்பதால்)
5. மஹ்மூத் அஹ்மதி நெஜாத் (அமெரிக்காவை எச்சரிப்பதால்)
6. நெல்சன் மண்டேலா ( தென்னாப்பிரிக்க விடுதலையில்)

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் அறுவர்
1. தேவன்
2. தி.ஜானகிராமன்
3. லா.ச.ராமாமிருதம்
4. கி.ராஜநாராயணன்.
5. ஜெயகாந்தன்
6. தோப்பில் முஹம்மது மீரான்

எனக்குப் பிடித்த திரைப் படங்களுள் ஆறு
1. தேவதாஸ்
2. தியாகம்
3. நவராத்திரி
4. நான் ஏன் பிறந்தேன்
5. அவள் அப்படித்தான்
6. ஆறிலிருந்து அறுபதுவரை

எனக்குப் பிடித்த கவிஞர்களுள் அறுவர்
1. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
2. கவியரசு கண்ணதாசன்
3. மீரா
4. நா.காமராசன்
5 மு.மேத்தா
6. நீலமணி

மறக்க முடியா நாவல்/ புதினங்களுள் ஆறு
1. கல்கியின் சிவகாமியின் சபதம்
2. தேவனின் துப்பறியும் சாம்பு
3. ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சிலமனிதர்கள்
4. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள்
5. மு.மேத்தாவின் சோழநிலா
6. தோப்பிலின் ஒரு கடலோர கிராமத்தின் கதை

எனக்குப் பிடித்த ஊர்களுள் ஆறு
1. நான் பிறந்த மண்
2. உதகமண்டலம்
3. பெங்களூர்
4. திருவனந்தபுரம்
5. ஆம்பூர்
6. குற்றாலம்

நான் காணவிரும்பும் நாடுகளுள் ஆறு
1. ஸ்விட்சர்லாந்து
2. ஜப்பான்
3. ஜெர்மனி
4. ப்ரான்ஸ்
5. சிங்கப்பூர்
6. இத்தாலி

எனக்குப் பிடித்த உணவு வகைகளுள் ஆறு
காலைச் சிற்றுண்டிககு
1. முதல் நாள் இரவில் மண்சட்டியில் சமைத்து வைத்த சுறாமீன் குட்டியை
மறுநாள் காலை அரிசிமாவில் செய்த உரொட்டியுடன் உண்டு கறுப்புத் தேநீர் பருகுவது (கிடைப்பது வெகு அரிது!)

2. இடியப்பமும் ஆட்டிறைச்சியும்

3. அப்பமும் உருளைக் கிழங்கும்

4. பழைய சோறும் கட்டித் தயிரும் நெல்லிக்காய்த் தொகையலும்

நண்பகல்
5. வெண் சோற்றில் தேங்காய்ப் பால்க் குழம்பும் புளித் தொகையலும் சேர்த்து, பொரித்த குதிப்பு மீன் கருவாட்டுடன் உண்ணும் உணவு..( நெஞ்சு வரை சோறு ஏறும்... இப்போதெல்லம் அருகி விட்டது)

இரவில்
6. அரிசிமா உரொட்டியுடன் கோழி இறைச்சி

(சப்பாத்தி, பூரி, பரோட்டா பிரியானி போன்ற முகலாய / வட இந்திய உணவுகள் பஞ்சத்துக்கு மட்டும்...)

ஆறில் வலை வீச நான் அழைக்கும் வலைஞர்களில் அறுவர்
1. குழலி
2. பன் பட்டர் ஜாம்
3. நாமக்கல் சிபி
4. தி.ராஸ்கோலு
5. பகுத்தறிவாளன்
6. போலி டோண்டு :-)

குறிப்பு;-
போலி டோண்டுவின் ரசிகர் மன்றத்திற்கு விண்ணப்ப அடி போட்டேன். அது வ(ப)லித்ததா இல்லையா எனத் தெரியவில்லை

14 Comments:

Blogger அசுரன் said...

ஆற்றில் குதித்து அதகலம் பண்ணும் அடி-அதிரடியே, தங்கள்து உணவு லிஸ்ட் என்னை மலைக்க வைக்கிறது.

உண்மையிலேயே நீர் கொடுத்து வைத்தவர். தங்களது அம்மா வித விதமாக சமைத்து போட்டுள்ளார்கள்.

நாலு ஆறு மணி நேரம் கேட்டு. சொன்னபடி செய்து அதிரடியிலும் தாங்கள் time conscious-யோட இருப்போம் என்று நிருபித்து விட்டேர்கள்.

வாழ்த்துக்கள்,
அசுரன்.

June 30, 2006 12:44 pm

 
Blogger அடி-அதிரடி said...

'அசுர' உணவு இல்லை; மனிதன் அசர உண்ணும் உணவுதான் அது.

கடற்கரை அடுத்து இருக்குமானால் இன்னும் சிறப்பு.

வருகைக்கு நன்றி அசுரரே!

ஆமாம். நமது போலி டோண்டுவைக் காணோமே..?

July 01, 2006 8:35 am

 
Blogger அசுரன் said...

//ஆமாம். நமது போலி டோண்டுவைக் காணோமே..? //

போலி டோண்டுவை பிடிக்க விடாது கறுப்பின் வலையில் ஒரு பழைய பேட்டி உள்ளது. அதை refer செய்தால் அவரது மெயில் அய்டி கிடைக்கும்

அசுரன்

July 01, 2006 9:26 am

 
Blogger அசுரன் said...

அட அய்யா..
நீர் பஞ்சத்துக்கு சாப்பிடும் அயிட்டங்களயே நாங்க அப்பப்பதான் சாப்பிடுறோம்....

அசுரன்.

July 01, 2006 10:05 am

 
Blogger அடி-அதிரடி said...

நன்றி,

நானும் விடாது கறுப்பு எடுத்த பேட்டியை முன்பு படித்துள்ளேன், இனி மீண்டும் ஒரு முறை படிப்பேன்.

பஞ்சத்துக்கு ஆண்டி; பரம்பரை ஆண்டி என்று சொல்வோமல்லவா?

அதுபோல் பிடித்த உணவு
மேற்சொன்னவை;

பஞ்சத்துக்கு உண்பது மேற்சொன்னவை கிடைக்காதபோது.

அசுரக் காதை நீட்டுங்கள்:-

'இப்பொது பெரும்பாலும் உணவுப் பஞ்சம்தான்

July 02, 2006 11:01 am

 
Blogger குழலி / Kuzhali said...

அழைப்புக்கு நன்றி அடி-அதிரடி

July 03, 2006 6:26 am

 
Blogger அடி-அதிரடி said...

வருகைக்கு நன்றி குழலி

'ஆறு' போட வரல் எப்போது?

July 03, 2006 10:25 am

 
Blogger தி.ராஸ்கோலு said...

அதிர அடிக்கும் அடி-அதிரடியாரே

அழைப்புக்கு நன்றி. நான் இனிமேல் தான் வலைப்பூ தொடங்க வேண்டும். விரைவில் ஆறோடு தொடங்குகிறேன்

July 03, 2006 1:19 pm

 
Blogger இப்னு ஹம்துன் said...

ஆறாத பதிவுகள் அய்ந்து அளித்துவிட்டு 'ஆறு'தல் பதிவாக 'ஆறு'பதிவிட்டுள்ளீர்கள்.
பெருகட்டும் உங்கள் பதிவுகள் வெள்ளமென.

July 03, 2006 11:55 pm

 
Blogger அடி-அதிரடி said...

வருக! தி.ராஸ்கோலு.

ஆறடியில் தொடங்குங்கள்; ஆயிரம் அடியாய் வளரட்டும் உங்கள் வலைப் பதிவுகள்.

கவிஞர் இப்னு ஹம்துன்,

நறுக்கென ஒரு சுருக்கக் கவிதை அளித்துள்ளீர்கள்.

நன்றி.

ஒவ்வோர் அடி அடிக்கும்போதும் வருக;

விமர்சன அடி தருக!

July 04, 2006 11:58 am

 
Blogger பாலசந்தர் கணேசன். said...

தோப்பில் முகமது மீரானின் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. எனக்கு பாடதிட்டத்தில் இருந்தது(மதுரை காமராஜர் பல்கலை கழகம்). என்னை கவர்ந்த நாவல்களில் அதுவும் ஒன்று

July 04, 2006 12:04 pm

 
Blogger அடி-அதிரடி said...

வருகைக்கு நன்றி பாலச்சந்ர கணேசன்,

உங்கள் ஊர் நாகர்கோவிலா?

தோப்பிலின் மொழி நடை நாகர்கோவில்காரர்களுக்கே எளிதில் புரியும்.

July 05, 2006 9:33 am

 
Blogger அசுரன் said...

ஹி..ஹி....
நாங்களும் பஞ்சத்திலதான் இருக்கோம்..

லேட்டஸ்ட் வக்ரா தமாசு பாத்தேங்களா(படிச்சேங்களா)? அதை ஒட்டி நம்ம முத்து தமிழினி போட்ட பதிவு படிச்சேங்களா?

நன்றி
அசுரன்

July 10, 2006 8:57 pm

 
Blogger அசுரன் said...

ஹி..ஹி....
நாங்களும் பஞ்சத்திலதான் இருக்கோம்..

லேட்டஸ்ட் வக்ரா தமாசு பாத்தேங்களா(படிச்சேங்களா)? அதை ஒட்டி நம்ம முத்து தமிழினி போட்ட பதிவு படிச்சேங்களா?

நன்றி
அசுரன்

July 10, 2006 8:59 pm

 

Post a Comment

<< Home