நாட்டு நடப்பில் நமது அதிரடி

Friday, June 30, 2006

ஆறால் அடித்த அடி...

ஆறு அடி போடும் படி அசுரன் போர்ப் பறை கொட்டி அழைத்ததால் நான் போட்ட ஆறு அடி :-

எனக்குப் பிடித்த உலகத் தலைவர்களுள் அறுவர்
1. அன்னை இந்திரா காந்தி (அரசியல் தொலை நோக்குடன் பங்களா தேசத்தை உருவாக்கியதில்)
2. ஆபிரஹாம் லிங்கன் (அமெரிக்க அடிமை ஒழிப்பில்)
3. மிகாயீல் கார்ப்பசேவ் (நிறைய சுதந்திர நாடுகள் தோன்றியதற்கு)
4. ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவின் உறக்கத்தைக் கெடுப்பதால்)
5. மஹ்மூத் அஹ்மதி நெஜாத் (அமெரிக்காவை எச்சரிப்பதால்)
6. நெல்சன் மண்டேலா ( தென்னாப்பிரிக்க விடுதலையில்)

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் அறுவர்
1. தேவன்
2. தி.ஜானகிராமன்
3. லா.ச.ராமாமிருதம்
4. கி.ராஜநாராயணன்.
5. ஜெயகாந்தன்
6. தோப்பில் முஹம்மது மீரான்

எனக்குப் பிடித்த திரைப் படங்களுள் ஆறு
1. தேவதாஸ்
2. தியாகம்
3. நவராத்திரி
4. நான் ஏன் பிறந்தேன்
5. அவள் அப்படித்தான்
6. ஆறிலிருந்து அறுபதுவரை

எனக்குப் பிடித்த கவிஞர்களுள் அறுவர்
1. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
2. கவியரசு கண்ணதாசன்
3. மீரா
4. நா.காமராசன்
5 மு.மேத்தா
6. நீலமணி

மறக்க முடியா நாவல்/ புதினங்களுள் ஆறு
1. கல்கியின் சிவகாமியின் சபதம்
2. தேவனின் துப்பறியும் சாம்பு
3. ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சிலமனிதர்கள்
4. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள்
5. மு.மேத்தாவின் சோழநிலா
6. தோப்பிலின் ஒரு கடலோர கிராமத்தின் கதை

எனக்குப் பிடித்த ஊர்களுள் ஆறு
1. நான் பிறந்த மண்
2. உதகமண்டலம்
3. பெங்களூர்
4. திருவனந்தபுரம்
5. ஆம்பூர்
6. குற்றாலம்

நான் காணவிரும்பும் நாடுகளுள் ஆறு
1. ஸ்விட்சர்லாந்து
2. ஜப்பான்
3. ஜெர்மனி
4. ப்ரான்ஸ்
5. சிங்கப்பூர்
6. இத்தாலி

எனக்குப் பிடித்த உணவு வகைகளுள் ஆறு
காலைச் சிற்றுண்டிககு
1. முதல் நாள் இரவில் மண்சட்டியில் சமைத்து வைத்த சுறாமீன் குட்டியை
மறுநாள் காலை அரிசிமாவில் செய்த உரொட்டியுடன் உண்டு கறுப்புத் தேநீர் பருகுவது (கிடைப்பது வெகு அரிது!)

2. இடியப்பமும் ஆட்டிறைச்சியும்

3. அப்பமும் உருளைக் கிழங்கும்

4. பழைய சோறும் கட்டித் தயிரும் நெல்லிக்காய்த் தொகையலும்

நண்பகல்
5. வெண் சோற்றில் தேங்காய்ப் பால்க் குழம்பும் புளித் தொகையலும் சேர்த்து, பொரித்த குதிப்பு மீன் கருவாட்டுடன் உண்ணும் உணவு..( நெஞ்சு வரை சோறு ஏறும்... இப்போதெல்லம் அருகி விட்டது)

இரவில்
6. அரிசிமா உரொட்டியுடன் கோழி இறைச்சி

(சப்பாத்தி, பூரி, பரோட்டா பிரியானி போன்ற முகலாய / வட இந்திய உணவுகள் பஞ்சத்துக்கு மட்டும்...)

ஆறில் வலை வீச நான் அழைக்கும் வலைஞர்களில் அறுவர்
1. குழலி
2. பன் பட்டர் ஜாம்
3. நாமக்கல் சிபி
4. தி.ராஸ்கோலு
5. பகுத்தறிவாளன்
6. போலி டோண்டு :-)

குறிப்பு;-
போலி டோண்டுவின் ரசிகர் மன்றத்திற்கு விண்ணப்ப அடி போட்டேன். அது வ(ப)லித்ததா இல்லையா எனத் தெரியவில்லை

Friday, June 16, 2006

அதிகாரப் போதை அடி

ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்துப் பழ.நெடுமாறன் நடத்தும் போராட்டங்களில் 'அரசியல் காரணங்களால் பா.ம.க. கலந்து கொள்ளாது' என பா.ம.க. நிறுவனர் தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் ஐயா தெரிவித்துள்ளார்.

என்ன அரசியல் காரணங்கள்?

தம்முடன் கூட்டணியில் இருந்து தற்போது அம்மாவுடன் ஐக்கியமாகிவிட்ட வையாபுரி.கோபாலசாமியும் தொல். திருமாவளவனும் கலந்து கொள்ளும் போராட்டத்தில் தமது கட்சியும் பங்கேற்பது தற்போதைய கூட்டணிக்கு ஒவ்வாது என்பது போன்ற அரசியல் காரணங்களால் பா.ம.க. கலந்து கொள்ளாது என்று தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் ராமதாஸ் கருதியிருப்பாரெனில் அது முற்றிலும் தவறு.

ஏனெனில் தமிழகத்துப் பொறுக்கி அரசியல் (ஓட்டுப் பொறுக்குவதைக் கூறுகிறேன்) காரணங்கள் உலகத் தமிழினத்துக்குச் சிக்கல் வரும்போது செல்லுபடியாகாது. ஒரு பொதுவான நோக்கத்திற்காக - இன்னல் படும் ஈழத் தமிழருக்காக - அரசின் கவனத்தை ஈர்க்க நடத்தப் படும் போராட்டத்தில் அற்ப, கூட்டணிப் பிளவுகளைக் காரணம் காட்டிக் கலந்து கொள்ளாது தவிர்ப்பது என்பது சரியான அணுகுமுறை ஆகாது.

மும்பை (முன்னாள் பம்பா)யில் பிழைக்கச் சென்ற தமிழர்களைத் தாக்கித் துரத்தியடிப்பதற்கென்றே சிவசேனை என்ற பயங்கர குண்டர் படையை நடத்தி வந்தார் பால்தாக்கரே என்ற மராட்டிய பார்ப்பன வெறியர். பின்னர் அவர் இந்துமத வெறியராகி முஸ்லிகளைத் துரத்த வேண்டும் என்றார். (பம்பாய்க் கலவரத்தில் ஆண் குறியைப் பார்த்து அடையாளம் கண்டு, ஆயிரக் கணக்கில் முஸ்லிம்களைச் சிவசேனையினர் கொன்றொழித்தது தனிக்கதை) அப்படிப் பட்ட தமிழர் விரோத பால்தாக்கரேயைத் தமிழகத்துக்கு அழைத்து வந்து ஈழத் தமிழருக்கான ஆதரவு மாநாடு நடத்தியவர்தாம் தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ராமதாஸ் ஐயா. தமிழர் என்று சொன்னால் பால்தாக்கரே வரமாட்டார் என்பதால் அவருக்குப் பிடித்த "இந்து" என்ற இனிப்பு மிட்டாயைக் கொடுத்து, "இலங்கையில் துன்பப் படும் இந்துத் தமிழர்களைக் காக்க" என்று அந்த மாநாட்டை நடத்தினார். இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழர் எதிரியான பால்தாக்கரேயையே அழைத்து மாநாடு போட்டவர், கேவலம் கூட்டணிப் பிளவுகளைக் காரணம் காட்டி இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்திருப்பாரா?

ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது "பெற்ற தாயைப் புணர்வதற்குச் சமம் ; அத்தவறை நான் மீண்டும் செய்யவே மாட்டேன்" என்று வீர ஆவேச உறுதிமொழி எடுத்துத் தமிழகத்தின் செய்தி ஊடகங்களில் நிறைந்து நின்ற ராமதாஸ், குறுகிய காலத்தில் மீண்டும் ஒருமுறை அத்தவறைச் செய்தார். அதற்கே வெட்கப் படவோ தயங்கவோ செய்யாதவர், தமிழ்க்குடிதாங்கி ஆன பின் வைகோவும் திருமாவும் கலந்து கொள்ளும் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வெட்கப் பட்டுப் போராட்டத்தைப் புறக்கணிப்பாரா? நிச்சயமாக இக்காரணத்தால் புறக்கணிக்க மாட்டார்.

பின் வேறென்ன அரசியல் காரணங்கள்?

"நானோ என் குடும்பத்தவரோ அரசியலால் எதிகாலத்தில் எந்தப் பதவியும் பெற மாட்டோம்" என்று தமிழகத்து மக்களுக்கு உறுதிமொழி அளித்து, மேலே சொன்னபடி வழக்கம்போல் உறுதிமொழி(யில்தடு)மாறித் தம் மகன் அன்புமணிக்கு மத்திய அரசில் மந்திரிப் பதவி வாங்கிக் கொடுத்தவர்தாம் மருத்துவர் ஐயா.

இப்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தம் மகனின் பதவிக்குப் பங்கம் வந்துவிடக் கூடாதே என்ற பதைப்பு(அரசியல்)காரணங்களால் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் தமிழ்க்குடிதாங்கித் தம்குடிதாங்கியாகிவிட்டார். இனி கா(ஆ)ட்சிகள் மாறும்போது அடுத்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தைத் தமிழ்க்குடிதாங்கியே முன்னின்று நடத்துவார் என்றும் அப்போராட்டத்திற்குத் திரிசூலத்துடன் பிரவீன் தொகாடியாவையோ நரேந்திர மோடியையோ அழைக்கவும் தயங்க மாட்டார் என்றும் எதிர்பார்க்கலாம்.