நாடக அடி
நாட்டுப் பற்று என்பது தங்களின் ஒட்டு மொத்தக் குத்தகைச் சரக்கு என்று 'பம்மாத்து'ப் பண்ணிக் கொண்டிருக்கும் சங் பரிவார் பீ.ஜே.பீ கும்பலின் மற்றொரு நாடகம் இவ்வாரம் அரங்கேறியது.
பீ.ஜே.பீ அரசில் அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் ஸிங்

இது குறித்து விளக்கமளிக்க ஊடகத்தினரைச் சந்தித்தபோது, அமெரிக்காவின் உளவாளியாகச் செயல் பட்ட அந்த உயர்நிலை அலுவலரின் பெயரைச் சொல்ல மறுத்து விட்டார். பிரதமர் மன்மோஹன் ஸிங்கிடம் மட்டுமே அவர் பெயரைத் தெரிவிப்பேன் என்றும் பூசி மெழுகியுள்ளார்.
இது குறித்துக் கருத்துச் சொல்லவோ அல்லது உண்மையை உரைக்கவோ நரசிம்ம ராவ் இன்று நம்மிடையே இல்லை என்பது ஜஸ்வந்த் ஸிங்கின் முதல் தைரியம். அவர் குறிப்பிடும் அந்த முன்னாள் உயர்நிலை அலுவலரும் இந்தியாவிலேயே இல்லை என்று அவரே கூறிவிட்டார். இது ஜஸ்வந்த் ஸிங்கின் இரண்டாவது தைரியம்.
இந்நிலையில் இவர் தம் நூலில் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து ஊடகத்தினர் பல்வேறு வினாக்களைத் தொடுத்தனர். "பத்தாண்டுகளுக்கு முன்பே அமெரிக்க உளவாளி பற்றித் தெரிந்திருந்தும் நீங்கள் ஆண்ட காலத்தில் ஏன் அவ்வுளவாளி மீது நடவடிக்கை எடுக்கவில்லை?" என்ற வினாவுக்கு,"அவர் அமெரிக்காவுக்குக் கொடுத்த இரகசியங்கள் தலையாயவை அல்ல" என்று விடையிறுத்துள்ளார்.
அத்தனை முதன்மை வாய்ந்த இரகசியம் இல்லை என்றால் இப்போது- பத்தாண்டுகளுக்குப் பின்- அதைப் பற்றி எழுதி வீணான ஒரு பரபரப்பை உருவாக்கியது ஏன்?
உளவு சொன்ன உயர்நிலை அதிகாரியின் பெயரைப் பிரதமரிடம் மட்டும்தான் தெரிவிப்பாராம். இது என்ன ஆரியக் கூத்தா?
நாட்டுப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் ஒரு குற்றம் பற்றிய செய்தியைப் பொத்தாம் பொதுவாக ஒரு நூலில் குறிப்பிடுவாராம்; அது பற்றி மேல் வினா வரும்போது பிரதமரிடம் மட்டும் சொல்வேன் என்பாராம். இது மன்மோஹன் ஸிங்கின் வீட்டு அடுக்களையில் தேங்காய் மூடி திருடிய செயலில்லை- அவரிடம் மட்டும் சொல்வதற்கு. நாட்டு அணு ஆயுத இரகசியத்தைத் திருடிய செயல். அது பற்றி அறியும் உரிமை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு. அதை மறைக்கும் உரிமை ஜஸ்வந்துக்கு இல்லை.
இந்திய நாடு விடுதலை பெற்ற பின் அதன் இராணுவம் மற்றும் ஆயுத இரகசியங்களை எதிரிகளுக்கு விற்றவர்கள் என்று பிடிபட்டவர்களில் மிகவும் பேர் பெற்றவர்கள் நாராயணன், சங்கரன், கோபாலன் ஆகியோரே. இவர்கள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய உயர்நிலை அலுவலர்கள் ஆவர். நாட்டுப் பற்று எமக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடும் உயர் சாதியினர்.(இவர்கள்தான் இது போன்ற அரசுத் துறைகளில் உயநிலைப் பதவியில் வரமுடியும்) சிறுபான்மையினரோ அல்லது இந்து சமய சாதி அடுக்கில் கீழ் நிலையில் உள்ளவர்களோ இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகப் புகாரில்லை.
இப்போது ஜஸ்வந்த் மூடி மறைக்கப் பார்க்கும் பெயரும் இத்தகையதுதானோ?
வெளி உளவுத்துறை (R A W) யில் உயர் நிலை அலுவலராக (D I G )ப் பணியாற்றிய உண்ணி க்ருஷ்ணன் என்பவர் அமெரிக்காவின் உளவாளியாகவும் செயல்பட்டார் என்பதற்காகக் கைது செய்யப் பட்டுப் பதவி நீக்கம் செய்யப் பட்டார். டெல்லி திகார் சிறையிலும் அடைக்கப் பட்டார்.அது போல இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவ்வுளவாளி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காது விட்டுவிட்டு - அவர் நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதித்து விட்டு - இப்போது அதைப் பற்றிக் கூறுவது பரபரப்பு நாடகமே அன்றி வேறில்லை.
பிரதமராகப் பதவி வகித்த வாஜ்பேயும் துணைப் பிரதமராயிருந்த ஆட்வாணியும் ஊடகங்களால் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப் பட்டிருக்கும் இக்காலச் சூழலில் தாங்கள் இருப்பதை மக்களுக்கு நினைவூட்ட ஏதாவது செய்ய வேண்டியது பீ.ஜே.பீயினருக்கு இப்போது கட்டாயமாய் ஆகிப் போனது. ரத யாத்திரை நடத்துவது, அவ்வப்போது அயோத்திப் பிரச்சனையைக் கிளப்புவது, அல்லது கட்சியின் உயர்நிலைத் தலைவர்களைக் களையெடுப்பது எனச் செய்து அலுத்தபின் இப்போது நூல் எழுதிப் பரபரப்பு நாடகம் நடத்துகின்றனர்.
காதாசிரியர் ஜஸ்வந்த் ஸிங்கின் இந்தத் தோல்வி நாடகத்தை அதிக நாட்கள் ஓட்ட முடியாது என்பதால், வில்லன் மதன்லால் குரானா இணைந்து வழங்கும் அடுத்த நாடகத்தை விரைவில் எதிர் பார்ப்போமாக!
12 Comments:
அதிரடியாய் அடித்துள்ளீர்.
இவர்கள் போடும் வேடமும் நடத்தும் நாடகங்களும் உம்மைப் போன்றவர்களால் வெளிக் கொணரப்படுவது நாட்டுக்கே நல்லது!
July 27, 2006 6:09 pm
அய்யா
நல்ல பதிவு. இதுபோன்ற பதிவுகளை அடிக்கடி பதியுங்கள்.
July 27, 2006 8:50 pm
வருக விழிப்பு!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
July 28, 2006 1:26 am
நம் நாட்டு இராணுவ ரகசியத்தை வெளிநாட்டுக்கு விற்ற தேச துரோகி மீது அந்நேரமே நடவடிக்கை எடுக்காதது "ஜெய்ஹிந்த்" வேஷமிடும் வேடதாரிகள் செய்த முதல் குற்றம்.
பத்து ஆண்டுகளுக்குப் பின் தேச விரோதி வெளிநாடு தப்பிச் சென்று விட்டதை உறுதி படுத்திக் கொண்டு இந்திய உளவுத் துறை வெறும் வெற்று வேட்டு என நாட்டு மக்கள் அவநம்பிக்கை கொள்வதற்காகவும், வெளிநாடுகள் இந்திய உளவுத் துறையைப் பார்த்து எள்ளிநகையாடுவதற்காகவும் அத்தகவலை வெளியிட்டு உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்தது இரண்டாவது குற்றம்.
நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முக்கிய விஷயத்தை பகிரங்கமாக வெளியிட்டு விட்டு அதன் விபரத்தை பிரதமரின் காதில் தான் பெய்யுவேன் என அடம் பிடிப்பது மூன்றாவது பெரிய முட்டாள்தனம்.
பாஜக பெயரை வைத்துக் கொண்டு பாரதத்துக்கு தீய ஜன கட்சியாக உருவெடுத்துள்ள இந்த தீய சக்தியின் சுய உருவம் அவர்களாலேயே இவ்வாறு வெளிக்கொண்ரப்படும்.
இது உண்மை வெகுநாள் உறங்காது என்பதற்கு சான்றாகும்.
தொடர்ந்து அடியுங்கள் தேசவிரோத சக்திகளின் தலைகளில் இடி இறங்கும் விதத்தில்.
இறை நேசன்
July 29, 2006 12:01 am
இறைநேசன்,
நன்றாயுரைத்தீர். உமது பதிவு என்னிலும் சிறப்பாய் இந்த நாடக நடிகர்களை அம்பலப்படுத்துகிறது. இவர்களிடமிருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற இதுபோன்ற பதிவுகள் தேவை.
July 29, 2006 7:07 am
வாஜ்பாய் மற்றும் அத்வானிக்கு மாபியா குழுக்களுடன் தொடர்பு - உமாபாரதி
முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கும் முன்னாள் உள்துறை அமைச்சர் எல். கே. அத்வானிக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு இருக்கிறது என பாரதீய ஜனதாவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் உமாபாரதி குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மாஃபியா கும்பல்களுடன் தொடர்பு கொள்வதற்கு வாஜ்பாயி உடைய வளர்ப்பு மகளின் கணவர் மற்றும் அத்வானியின் மகன் போன்றோர் உதவுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். பாரதீய ஜனசக்தி என்ற புதிய கட்சியை உருவாக்கிய உமாபாரதியின் இந்த அதிரடி அறிக்கை பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாரதீய ஜனதாவின் தலைமையிலான முந்தைய ஆட்சியில் பொது விமானத்துறை அமைச்சராக இருந்த சரத்யாதவின் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாமல் ஒரு விமான நிறுவனத்திற்கு அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியின் அலுவலகம் அனுமதி வழங்கியது. இச்சம்பவம் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களோடு இவர்களுக்கு உள்ள நெருக்கத்தோடு தொடர்புள்ள ஒன்று என உமாபாரதி குறிப்பிட்டுள்ளார். இந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு தீவிரவாதிகளோடும் போதைப்பொருள் வியாபாரிகளோடும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். சமீபத்திய மும்பை தொடர் குண்டு வெடிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடும் பட்சத்தில் சாட்சி என்கின்ற நிலையில் அதற்கான முழு ஆதாரங்களையும் சமர்ப்பிக்க, தான் தயாராக இருப்பதாகவும் உமாபாரதி தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரப்போவதாகவும் அவர் கூறினார்.
வாஜ்பாய் மற்றும் அத்வானியின் உறவினர்களுக்கும் ஒரு முன்னாள் பாஜக பொதுச்செயலாளருக்கும் தற்போதும் மாஃபியா கும்பல்களுடன் தொடர்பிருப்பதாக அவர் அறிவித்தார். பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் அவர்களுக்கு தேசப்பற்று இருந்தாலும் மாஃபியாக்களுடன் தொடர்புடைய தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தைரியம் இல்லை என கண்டனம் தெரிவித்தார். பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் உத்தரபிரதேசத்தில் ராஜ்யசபா உறுப்பினருக்காக போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவருக்கு அங்கு தீவிரவாதிகளுடனும் மாஃபியா கும்பல்களுடனும் தொடர்பிருந்தது என்றும் குற்றம் சாட்டினார்.
"மத்தியபிரதேசத்தில் உள்ள போபால், தீவிரவாதத்திற்கும் மாஃபியா செயல்பாடுகளுக்கும் உரிய தளமாக செயல்படுகிறது. என்னிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாஃபியா கும்பல்களை வளர்ப்பதும் பாதுகாப்பதும் அரசியல் கட்சிகள் என்ற உண்மையை நான் வெளிப்படுத்தியதால் என் உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது" என்றும் உமாபாரதி கூறினார். பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ள ஒரு கட்டடம் கட்டும் தொழிலதிபருடன் மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு தொடர்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மத்தியப் பிரதேச கவர்னர் டாக்டர். பலராம் ஜாக்கர் அவர்களைக் கொண்டு தனக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
பாரதீய ஜனதாவின் மறைந்த மூத்த தலைவர்களில் ஒருவரான பிரமோத் மகாஜனின் இறுதிச் சடங்கில் நடந்த மதுபான விருந்தில் அளவுக்கதிகமான போதைப்பொருளைப் பயன்படுத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் மகாஜனின் மகனுக்கு தங்களது ஆதரவு உண்டு என பாஜக மூத்த தலைவர்கள் அவரை சிறைச்சாலையில் சந்தித்து ஆறுதல் அளித்த சம்பவம் இங்கு நினைவு கூறத்தக்கது.
தேசத்தின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் சவாலாக விளங்கும் குண்டுவெடிப்பு போன்ற தீவிரவாத, பயங்கரவாத செயல்பாடுகள், இளைய சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு பங்கம் விளைவுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் நடவடிக்கைகள் நாட்டில் மலிந்து கிடக்கும் இன்றைய சூழலில், செல்வி உமாபாரதியின் இந்த வெளிப்படுத்தல்கள் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
நன்றி
சத்தியமார்க்கம் டாட் காம்
July 29, 2006 7:12 am
//இந்திய நாடு விடுதலை பெற்ற பின் அதன் இராணுவம் மற்றும் ஆயுத இரகசியங்களை எதிரிகளுக்கு விற்றவர்கள் என்று பிடிபட்டவர்களில் மிகவும் பேர் பெற்றவர்கள் நாராயணன், சங்கரன், கோபாலன் ஆகியோரே. இவர்கள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய உயர்நிலை அலுவலர்கள் ஆவர். நாட்டுப் பற்று எமக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடும் உயர் சாதியினர்.(இவர்கள்தான் இது போன்ற அரசுத் துறைகளில் உயநிலைப் பதவியில் வரமுடியும்) சிறுபான்மையினரோ அல்லது இந்து சமய சாதி அடுக்கில் கீழ் நிலையில் உள்ளவர்களோ இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகப் புகாரில்லை.
இப்போது ஜஸ்வந்த் மூடி மறைக்கப் பார்க்கும் பெயரும் இத்தகையதுதானோ?
வெளி உளவுத்துறை (R A W) யில் உயர் நிலை அலுவலராக (D I G )ப் பணியாற்றிய உண்ணி க்ருஷ்ணன் என்பவர் அமெரிக்காவின் உளவாளியாகவும் செயல்பட்டார் என்பதற்காகக் கைது செய்யப் பட்டுப் பதவி நீக்கம் செய்யப் பட்டார். டெல்லி திகார் சிறையிலும் அடைக்கப் பட்டார்.அது போல இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவ்வுளவாளி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காது விட்டுவிட்டு - அவர் நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதித்து விட்டு - இப்போது அதைப் பற்றிக் கூறுவது பரபரப்பு நாடகமே அன்றி வேறில்லை.//
அடி-அதிரடி,
BJPக்கு இது செருப்படி....
ஓட்டு பொறுக்கிகளுக்கு ஏதாவது தேவைப்படுகிறது,
ஒரு சின்ன requestகள்:
அடி அதிரடி,
அந்த மாபியா BJP லிங்கை வைத்து இன்னொரு பதிவு போடலாமே?
மேலும் ராமாதாசை அம்பலப்படுத்தி ஒரு சிறப்பான பதிவு போடலாமெ?
நன்றி,
அசுரன்.
August 01, 2006 7:10 am
//ஒரு சின்ன requestகள்:
அடி அதிரடி,
அந்த மாபியா BJP லிங்கை வைத்து இன்னொரு பதிவு போடலாமே?
மேலும் ராமாதாசை அம்பலப்படுத்தி ஒரு சிறப்பான பதிவு போடலாமெ//
.....லாம்தான். ஆனால் நேரம்தான் தலையாய சிக்கல். நேரமின்மையால் கணினியில் அமர்வதும் படிப்பதும் எழுதுவதும் மிகப் பளுவான பணிகளாகத் தோன்றுகின்றன. பார்ப்போம். இயன்றால் உங்கள் விருப்பம் விரைந்து நிறைவேறும்.
August 01, 2006 9:02 am
பீட்டர்,
உங்கள் பின்னூட்டம் ஒப்பனைப் பொருட்கள் மற்றும் முறைகள் குறித்தது. என் பதிவின் தலைப்பு நாடகம் என்றிருப்பதால் இதை அனுப்பியுள்ளீர்கள் என்று கருதுகிறேன்.ஒப்பனை பற்றி 'அடி'க்கும்போது உங்கள் பினூட்டம் வெளியிடப்படும்.
August 01, 2006 9:09 am
உண்மையிலேயே அடி அதிரடியாகத்தான் எழுதுகிறேர்கள்.
தொடர்ந்து எப்படியாவது எழுதிவாருங்கள். இந்துத்துவ சக்திகளை அடித்து நொறுக்க அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதுவும் தங்களைப் போன்ற ஆட்களின் தேவை அதிகமாக உள்ளது அதனால் தொடர்ந்து எழுதவும்
கவனித்தீர்களா மீண்டும் திண்ணையில் இந்துத்துவம் மிக அதிகமாக கோட்டமடிப்பதை.
நன்றி,
அசுரன்.
August 09, 2006 7:34 am
நன்றி அசுரரே!
ஆயின், நான் முன்னர்க் குறிப்பிட்டதுபோல் கிடைத்தற்கரிய நேரம் வாய்த்து விட்டால் எல்லாம் நலமாய் முடியும்.
இணையத்தில் இந்துத்துவக் கூக்குரல் ஓங்கி ஒலிப்பது கேட்கிறது.
யானை படுத்துவிட்டால் தவளையும் அதன் மேல் ஏறி விளையாடுமாம். அந்தக் கதைதான் இங்கே நடக்கிறது.
யானை எழும் நேரம் மிக அருகில்....
உங்களைப் போன்ற அசுரர்களின் போர்ப் பறைதான் யானையை எழுப்பும் இசை.
தொடர்ந்து ஒலிக்கட்டும் உங்கள் போர்ப் பறை.
August 09, 2006 11:20 am
நாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே
August 11, 2006 12:09 am
Post a Comment
<< Home